Posts

Showing posts from August, 2021
Image
  உங்கள் நிறுவனம் சரியான பாதையில்தான் செல்கிறதா ? ZERO TO ONE -PETER THIEL பேபால் (Paypal) மற்றும் பலன்ட்டிர் (Palantir) நிறுவனங்களின் இணை நிறுவனர் பீட்டர் தீல் எழுதிய புத்தகம் “ ஜீரோ டு ஒன் . ” இந்தப் புத்தகத்தில் அவர்   ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்   வெற்றிகரமான எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டுமென்றால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை விளக்குகிறார் . அவர் முன்வைக்கும் வழிமுறைகளின் வழியே , ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பது முதல் அதை வெற்றிப் பாதையில் செலுத்துவது வரையிலான நடைமுறைகளைப் பற்றிய புரிதலை உருவாக்கிக்கொள்ள முடியும் . இந்நூலில் விளக்கப்பட்டிருக்கும் முக்கியமான சில அம்சங்களைப் பார்க்கலாம் . புதுமை :   ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் வணிக மாதிரிகளை காப்பியடிப்பது அல்லது அதில் குறிப்பிடத்தக்க மாறுதல்களைச் செய்து தொழிலை மேம்படுத்துவது போன்றவற்றை கிடைமட்ட முன்னேற்றம் (HORIZONTAL PROGRESS) என்பார்கள் . ஆனால் புதியதாக ஒன்றை உருவாக்கும் போது பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண...
Image
  முடங்கிய தொழில்களை உயிர்ப்பித்த வித்தகர் HAVELS- HAVELS, THE UNTOLD STORY OF QIMMAT ROY GUPTA.-ANIL ROY GUPTA பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரத்தெருக்களில் சைக்கிளில்   மண்ணெண்ணெய்   விற்றுக் கொண்டிருந்த ஹிமத் ராய் குப்தா , வெறும் 10 ஆயிரம் ரூபாயுடன் டெல்லிக்கு வந்து ஒரு வர்த்தகராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் . இன்று இந்தியாவிற்கு விளக்கேற்றும் பிராண்டாக விளங்கும் 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ‘ ஹேவல்ஸ் ’ என்ற நிறுவனத்தை கட்டியெழுப்பிய கதைதான் Havels, The Untold Story of Qimmat Roy Gupta. இந்த புத்தகத்தை அவரது மகனும் தற்போதைய ஹேவல்ஸ் நிறுவனத்தின் தலைவருமான அனில் ராய் குப்தா எழுதி இருக்கிறார் .   மின்சார சாதனங்கள் தயாரிப்பில் ‘ ஹேவல்ஸ் ’ நிறுவனத்தை இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமாக மாற்றியதில் ஹிமத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது . ஹிமத் 1937- ம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தார் . ஆரம்பத்தில் ஹிமத் , அவரது மாமா வைத்திருந்த மின்சாரப் பொருள்கள் விற்கும் கடையில் மேலாளராக சேர்ந்தார் . மருமகனின் ஆர்வத்தை கண்ட மா...