தீர்வைத் தேடும் சரியான அணுகுமுறை BOOK REVIEW ON "APPARENT IN HINDSIGHT AUTHORED BY VECTOR CONSULTING GROUP சுப. மீனாட்சிசுந்தரம் THEORY OF CONSTRAINTS என்ற “கட்டுத்தளை கோட்பாட்டை” தொழில் உலகுக்கு அறிமுகம் செய்த எலியாஹூ கோல்ட்ராட் எழுதிய THE GOAL “கோல்“ தொழிற்சாலைகளில் உள்ள நடைமுறைகளில் இருக்கும் பிரச்சினைகளை விவரித்தது. அதன் அடிப்படையில், இன்றைய இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நீடித்திருக்கும் ஒரு மிகப் பெரிய பிரச்சினையை ‘APPARENT IN HINDSIGHT’ என்ற ஒரு பிசினஸ் நாவல் மூலமாக வெக்டர் கன்சல்டிங் நிறுவனம் அலசி சுவாரஸ்யமாகத் தந்திருக்கிறது. பாரம்பரிய நிர்வாக அணுகுமுறைக்கும் தற்போதுள்ள சிஸ்டம் சார்ந்த அணுகுமுறைக்கும் பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் மிகப்பெரிய தொழில்களிலும், உள்நாட்டு நிர்வாக அமைப்பை பொறுத்துதான் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தொழிற்சாலையின் ஒவ்வொரு துறையும் அதில் உள்ள பிரச்சினைகளை தங்களது கண்ணோட்டத்திலேயே அணுகுகின்றனர். உதாரணத்துக்கு, விநியோகத் துறையில் ஒரு பிரச்சினை என்றால், அந்தத் துறையின் அதிகாரி, அந்தத் துறைக்குள்ளாகவே அதை விவாதித்து தீர்க்க நினைப்...
Posts
Showing posts from May, 2021